சோளம்

சோளம்
இரவென்பது சந்தராவின் மொழி சந்திராவுடையது. இறுக்கமும் வாசிப்பவரின் கவனத்தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக்கிறது. அவர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத்தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான்! தன் அனுபவத்தின் ரகசியத்தை அவர் எழுதுகிறார். அதாவதுஇ வாழ்வின் மேல் அடுக்கை அல்ல; அதன் மடங்கிய உன் அடுக்கை ரகசியமாக தட்டியவுடன் திறக்கத் தயாராக இருக்கும் ரகசியார்த்தங்களை. தி.ஜானகிராமனின் ஒரு பாத்திரம். எல்லோரையும் அணைத்துக்கொண்ட அன்பே தானாய் தன்னைப் பனிநீராய் மாற்றிக்கொண்டு தெளிப்பான் நம் கதைக்காரர் சந்திராவும் அப்படித்தான்!
பிரபஞ்சன்
கதைகளில் சந்திரா படைத்துதரும் பெண்களின் பருண்மையுலரும் மரபான சமரசங்கள் கொண்டு கட்டப்படாத அவர்களின் அகவுலரும் சமகால தமிழ்ச்சிறுகதை வெளியில் இதுவரை காணாத சில திறப்புகளைக் கொண்டு விளங்குவதனை முன்னிட்டு ஒரு முக்கியத் தொகுப்பாக அமைகிறது.
அசதா
சில எழுத்தாளர்களுக்கு வசீகரமான எழுத்து நடை சாத்தியப்பட்டாலும். சொல்ல கதை இருக்காது. எழுத்தை மட்டுமே வைத்து கதை சொல்லி வசீகரித்து விடுவார்கள். ஆனால் மனிதர்களை அவர்களின் வாழ்வை நுட்பமாக பதிவு செய்வது அவ்வளவு எளிதன்று அப்படி வாய்க்கப் பெற்றவர்கள் வெரு சிலரே. அவர் தமிழில் தவிர்க்க முடியாத சிறுகதையாசிரியர் அல்ல மிகச் சிறந்த சிறுததையாரிசியர்களுள் ஒருவர். எழுத நினைப்பவர்கள் சிறுகதை எழுத நினைப்பவர்கள். மனித உணர்வுகள் அதன் வண்ணங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சந்திராவின் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்
டி.அருள் எழிலன்
கதைகள் முழுக்க வெக்கை மிகுந்த வாழ்வின் நசநசப்பையும் குருரத்தையும் மிக மிக அருகிருந்தும் அனுபவித்தும் எழுதியிருக்கிறார் சந்திரா. முல்லை பெரியாறு நதியிலிருந்து இருகை நிறைய தண்ணீரை அள்ளிக்கொண்டு ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் ஐநூறு கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து சென்னையில் சேர்த்ததுபோல் இருக்கிறது இவரின் கதைகள்.