ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  165.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!

பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் எழுதியது.

தமிழில்: வீயெஸ்வி அவர்கள்.

வரம் பெற்ற ,பிறரை வசீகரித்து அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் ஏழு பேருக்கும் தலைவணங்கி, வந்தனம் தெரிவிக்கும் முயற்சி. இந்த ஏழு மேதைகளும் இசையின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள்; அதன் வளர்ச்சியை வடிவமைத்தவர்கள்; இசை வானில் தங்கள் தனி முத்திரையைப் பதித்தவர்கள். அரியகுடி ராமானுஜ ஐயங்கார்: இன்றைய கச்சேரி வடிவத்தை அறிமுகப்படுத்தியவர்.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை:   நாகஸ்வரத்துக்கு உரிய இடம் கிடைக்கப் போராடியவர். செம்மங்கடி சீனிவாச ஐயர்: இசையில் மட்டுமின்றி அதன் நிறுவனத்திடமும் நிர்வாகத்திடமும் தாக்கம் ஏற்படுத்தியவர். ஜி.என்.பாலசுப்ரமணியம்: அவருடைய ஸ்டைலும் பாணியும் ரசிகர்களிடம் புதுவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பாலக்காடு மணி ஐயர்: தாளக் கருவியைப் பொறுத்தவரை முதலும் கடைசியுமானவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி: இந்தியாவிலும் சர்வதேச தளத்திலும் கர்நாடக இசைக்கு தனி இடம் பெற்றுத் தந்தவர். டி.ஆர்.மகாலிங்கம்: பாதை விலகச் சென்ற மேதை. புல்லாங்குழலுக்கு புது பரிணாமத்தைக் கொடுத்தவர். 

இந்த ஏழு கலைஞர்கள் இசையுலகில் ஏற்படுத்திய தாக்கத்தின் எல்லையை இந்த நூலின் வழியாக பாம்பே ஜெயஸ்ரீயும், டி.எம்.கிருஷ்ணாவும் விளக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களை உருவாக்கிய சக்திகள், அவர்கள் உருவாக்கிப் சக்திகள், அவர்களை முன்னோக்கி அழைததுச் சென்ற உற்சாக சாதனைகள் இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. சம்பவங்கள், துணுக்குத் தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் அணிவகுப்பு வழியே அந்த ஏழு கலைஞர்களின் வாழ்க்கையையும், அவர்கள்  வாழ்ந்த காலத்தையும் இந்த நூல் புத்துயிர் பெறச் செய்கிறது.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்! - Product Reviews


No reviews available