விரைவில் வெள்ளித்திரையில்
விரைவில் வெள்ளித்திரையில்
ஒரு தேர்ந்த இயக்குநருக்கு இவை திரைப்படம் எடுக்கப் போதுமான தொடக்கம், திருப்பங்கள், முடிவு என வண்ண ஓவியத்துக்கான ஆதார பென்சில் கோட்டுச் சித்திரம்போல் தெளிவான அடிப்படை வடிவம் கொண்டிருக்கின்றன. நாளைக்கே படப்பிடிப்புக்குப் போகலாம் என்ற அளவுக்குச் சில கதைகள் விரிவாகவே எழுதவும் பட்டிருக்கின்றன. இவை திரைப்படத்துக்கான கதைகள் என்பதோடு நில்லாமல் சமூக விமர்சனமாகவும் விரிந்திருக்கின்றன. இங்கு உருவான திராவிட அரசியலானது ஊடக, திரைப்படங்களைத் தமது பிரசார வெளியாகக் கொண்டிருக்கும் சூழலில், இந்தக் கதைகள் சமூக, அரசியல் பார்வையுடன் வெளியானதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
- திரைப்பட இயக்குநர் வஸந்த்
***
தமிழ்த் திரைப்படங்கள் நல்ல கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப் புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. B.R.மகாதேவன் எழுதியிருக்கும் இந்தக் கதைகள் திரைப்பட ஆர்வலர்களுக்காகவும் உதவி இயக்குநர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளன.
முத்திரை குத்தப்படுவோம் என்று அஞ்சியும் உள்நோக்கத்துடனும் இன்றைய திரையுலகம் விலக்கி வைக்கும் கருக்களையும் தைரியமாகத் திரைக்கதைகளாகக் கொடுத்திருக்கிறார் B.R.மகாதேவன்.
விரைவில் வெள்ளித்திரையில் - Product Reviews
No reviews available

