மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா?

0 reviews  

Author: நன்மாறன் திருநாவுக்கரசு

Category: அறிவியல்

Available - Shipped in 5-6 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா?

அறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது.
- விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின்.

எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட்க வைப்பதும் அறிவியல். அந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்ல வைப்பதும் அறிவியல். தேடிய விஷயங்களைப் பரிசோதனைக்கு உள்படுத்துவதும் அறிவியல். அந்தப் பரிசோதனைகளின் இறுதியில் இதுதான் உண்மை என்கிற ஒரு முடிவுக்கு வருவதும் அறிவியல்.

 

வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா, கண்ணாடியில் ஏன் ஒளி ஊடுருவுகிறது, ஞாபகங்கள் எப்படி உருவாகின்றன, விண்வெளி குளிருமா, ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிப்பது யார், பூமியில் நெருப்பை உருவாக்கியது யார், கோள்கள் எவ்வாறு நட்சத்திரங்களைச் சுற்றுகின்றன, தாவரங்களுக்குப் பச்சை நிறம் பிடிக்காதா, ஆக்சிஜன் ஆபத்தான வாயுவா, மனிதர்கள் சாகாவரம் பெற முடியுமா என்பன போன்று சுவாரசியமான, அதிகம் எழுதப்படாத விஷயங்களைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் ‘இந்து தமிழ் திசை’ ந