எனது இந்தியா (எஸ்.ராமகிருஷ்ணன்)

0 reviews  

Author: எஸ். ராமகிருஷ்ணன்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  650.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எனது இந்தியா (எஸ்.ராமகிருஷ்ணன்)

ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பதிவு செய்யப்படுகிற ஒன்றாகிவிட்டது. சுவாரஸ்யம் மிக்க வரலாறே உண்மை என்கிற கசப்பான காலகட்டத்தில், சாலச் சிறந்த பார்வையோடு, உண்மையை மட்டுமே பதிவு செய்யும் சிரமமிகு தேடுதலோடு இந்திய வரலாற்றைக் காலக் கல்வெட்டாகப் படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்தவராக, படித்தவராக, ஆவணங்கள் தொடங்கி ஆராய்ச்சிகள் வரை பகுத்துப் பார்த்தவராக ‘எனது இந்தியா’ தொடரை எஸ்.ராமகிருஷ்ணன் ஜூனியர் விகடனில் எழுதத் தொடங்கியபோது, அதன் உண்மையான சுவாரஸ்யத்திலும் வரலாற்று நிகழ்வறியும் பேராவலிலும் சொக்கிக் கிடந்தது வாசக வட்டம்.‘நீதி தேவதை’யை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் காரணமான மகாத்மாவின் கொலை வழக்கில் இருந்து தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணன், நீதிக்கும் இந்திய வரலாற்றுக்கும் உள்ள தொடர்பை மொகலாயர் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.மொகலாயர்களின் படையெடுப்பு, கஜினி முகமது 17 முறை படையெடுத்து இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்த அவலம்,மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அரியணையைப் பிடிப்பதற்காக நடந்த சதிகள், நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த போர்கள், வளம் கொழித்து செல்வச் செழிப்போடு விளங்கிய இந்தியாவின் நிலை, வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பின்னால் வணிகம் என்ற போர்வையில் இந்தியா சுரண்டப்பட்ட கோலம் என இந்திய வரலாற்றுச் சம்பவங்களை தெளிந்த நீரோடையின் ஓட்டமாகச் சொல்லி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி அதிகார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கை நிலை, கலாசாரம், பண்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம், மொகலாயர்கள் காலத்தில் இந்தியாவின் நிலை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்கள் சந்தித்த கொடுமைகள், ஜாலியன் வாலாபாக் படுகொலை, தேசப் பிரிவினையின்போது நிகழ்ந்த வெறிச் செயல்களின் கோரத் தாண்டவம் என எண்ணிலடங்காத வரலாற்றுச் சம்பவங்களை எவ்வித விடுபடலுமின்றி இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. இனம், மொழி, இலக்கியம், மதம் என்று எல்லாவற்றையும் ஆராய்ச்சிபூர்வமாக தொட்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், பல நூல்களின் மேற்கோள்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.இதுவரை கேள்விப்பட்டிராத சில பெயர்க் காரணங்களையும், அதற்கான வரலாற்று பின்னணிகளையும் இந்த நூல் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது. உதாரணமாக, சென்னையில் இன்றும் ‘ஐஸ் ஹவுஸ்’ என்று வழங்கப்படும் இடத்துக்கான வரலாற்றுப் பின்னணியைச் சொல்லலாம். இப்படிப் பல காலங்களில் இந்தியாவில் நிகழ்ந்த சரித்திரத்தின் சுவடுகளை ஒட்டுமொத்தமாக கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கும் இந்த நூல், இந்தியாவின் பூர்வீகத்தைத் தெளிவுபடுத்தும் பேரறிவுப் பெட்டகம். ‘திரிந்தவனே அறிந்தவன்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தேசாந்திரியாகத் திரிந்தவராக, தேசப் பின்னணியை அறிந்தவராக எஸ்.ராமகிருஷ்ணன் படைத்திருக்கும் இந்த நூல் அனைவரிடமும் இருக்க வேண்டிய பரம்பரைப் பத்தாயம்!

எனது இந்தியா (எஸ்.ராமகிருஷ்ணன்) - Product Reviews


No reviews available