அற்புதத்தில் அற்புதம்
விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது" என்று இயேசு சொல்கிறார்.இதில் அவர் கோடி விஷயங்களைசட சொல்லிவிடுகிறார்.நீதிக்கதைகளின் அழகே அதுதான்.நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது.விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது.மரம் இருக்கிறது.இதுதான் கடவுளின் பேரரச.இதுவே விண்ணரசு .அதை எங்கோ தேடுகிறீர்கள்;வேதனைப்பட்டுதம் தேடுகிறீர்கள்.கடவுளின் பேரரசை நீங்கள் காண விரும்பினால் நீங்கள் விதையாக மாறி அழியவேண்டும்.அப்போது சட்டென மரம் தோன்றிவிடும்.நீங்கள் இருக்கமாட்டீர்கள்.ஆனால் கடவுள் இருப்பார்.நீங்கள் சிறையாகிவிட்ட விதைகள்.புத்தர் ஒரு விதை.இயேசு ஒரு விதை.ஆனால் அவர்கள் சிறையாகி விடவில்லை.வித்தும் ஓடும் தகர்ந்து மரமானவர்கள்.