எங்கே செல்கிறது இந்தியா

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எங்கே செல்கிறது இந்தியா

இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளைவிட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஏனென்றால் அதன் ஒரு பகுதியாக வளரும் குழந்தைகளிடமிருந்து மலக்கழிவுக் கிருமிகளை கழிப்பிடங்களும், கழிப்பறைகளும் அப்பால் வைக்கின்றன. இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைகளையோ அல்லது கழிப்பிடங்களையோ பயன்படுத்துவதில்லை. அதனால், அருகில் உள்ள ஏழை நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகள் மிகவும் அதிகமாக இறந்துவிடுகின்றன. இந்தியாவிலுள்ள குழந்தைகள் சஹாரா –ஆஃப்ரிக்க துணைக்கண்டத்திலுள்ள குழந்தைகளைவிட வளர்ச்சி தடைபட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவின் திறந்தவெளி மலம் கழிப்பு வறுமையினால் அல்ல: சாதிய அமைப்புமுறை, தீண்டாமை, சடங்குபூர்வ புனிதம், தீட்டு ஆகியவற்றின் நேரடி விளைவுகளாலேயே என்பதை ‘எங்கே செல்கிறது இந்தியா?’ மெய்ப்பித்துக் காட்டுகிறது.

காஃபேவும், ஸ்பியர்ஸும் இந்த உலகம் முழுவதும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்மார்கள், குழந்தைகள் முதல் உள்ளாட்சி நிறுவனங்களில் திட்டங்களை நிறைவேற்றுவோர், கொள்கைகளை உருவாக்கும் மூத்த அரசு அதிகாரிகள், பன்னாட்டு வளர்ச்சித் தொழில் துறையினர் வரையான கதாபாத்திரங்கள் மூலம் துப்புரவில் கவனமற்ற ஒரு பொருள்பற்றிய, ஒரு சுகாதாரமற்ற கதையைக் கூறுகிறார்கள். அதிகப்படுத்தப்பட்ட நிதிகளையும், ஒருபோதும் பயன்படுத்தப்படாத கழிப்பிடங்களையும் பற்றி அவர்கள் எழுதுகிறார்கள். சாதிகளை ஒழிப்பதற்கும் ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுவதை ஒழிப்பதற்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அறைகூவல் விடுக்கும் ‘எங்கே செல்கிறது இந்தியா?’ உரிய தருணத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான நூல்.

எங்கே செல்கிறது இந்தியா - Product Reviews


No reviews available