உன் அற்புத ரோஜா மலரட்டும்
எல்லாச் சிந்தனைகளையும் ஆத்ம ஞானி கை கழுவி விட்டுவிடுவார்.ஒரு மெளனத்தில் பரிபூரண மெளனத்தின் அமைதியில் புனிதத்தில் அவர் ஒரு கண்ணாடியாகி விடுகிறார்.அதில் பிரதி பலிக்கிறது.எதார்த்தம்.மானிடப் பிரஞை உலகின் பூ மலர்ச்சிதான் யோகி.அவரது மிகவுயர்ந்த தரிசனத்தை மூன்று சொற்களால் விளக்கலாம்.பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்பட்டு வரும் அழகான சொற்கள் அவை.மாறாது நிலை பெற்ற சொற்கள் அவை.மிகப் புராதன காலத்தின் மூலத்திலிருந்து பிறந்த அந்த சொற்கள்: சத்தியம், சிவம், சுந்தரம். சத்தியம் என்பது உண்மை நீ அதை பற்றி என்ன நினைக்கிறாய் என்பதல்ல உண்மை.ஒன்று என்னவாக இருக்கிறதோ அது தான் உண்மை.எதார்த்தம்தான் உண்மையே அல்லாமல் ஒன்றை பற்றிய நம் அபிப்ராயம் அல்ல.இந்த உண்மையை அறிவதற்கு நீ சுத்தமாக அல்லாமல் போய்விட வேண்டும்.நீ இருக்கும் இருப்பே தரிசனத்தை சிதறடித்து விடும்.நீ இருப்பது என்பது மனம் இருப்பது விருப்பு வெறுப்புகளும் உன் நிலை பாடுகளும் இருப்பதாகும்.