தொலையுணர்வு

0 reviews  

Author: ஜோசப் மர்ஃபி

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  299.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தொலையுணர்வு

'ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ நூலாசிரியரிடமிருந்து இன்னுமொரு வெற்றிப் படைப்பு.

தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.

அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.

உங்கள் அழ்மனத்தின் சக்தியைக் கைவசப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் இப்புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்க்கின்றன.

தங்களுடைய தொலையுணர்வு சக்தியைக் கொண்டு பயனடைந்துள்ள பலருடைய உண்மைக் கதைகள் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் இடம்பெற்றுள்ளன. அவை உங்களுக்குக் கண்டிப்பாக ஊக்கமளிக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருத்தமான தீர்வுகளைத் தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு முடிவில்லாப் பேரறிவு உங்கள் ஆழ்மனத்தில் குடிகொண்டுள்ளது. எளிய, நடைமுறைக்கு சாத்தியமான வழிகளின் மூலம் அந்தப் பேரறிவைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்திக் கொள்ள இந்நூல் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.

தொலையுணர்வு - Product Reviews


No reviews available