திருப்பண்டம்
திருப்பண்டம்
பாரம்பரியமான கத்தோலிக்க தேவாலயங்களில், ஆண்டாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்ற புனிதர்களின் ஆடைத் துணுக்குகள், அழியாத பாகங்கள் ‘திருப்பண்டம்’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப் படுகின்றன. அதனை தூர நின்று தரிசிப்பதாலும், தொட்டுவிடுவதாலும், முத்தி செய்வதனாலும், தன் வாழ்வின் எல்லாம் சீராகும் என்கிற ஒரு எளிய மனதின் நம்பிக்கையின் பின் இருக்கின்ற சரணடைதல்தான் எத்தனை வியப்பானது.
திருப்பண்டங்கள், சக்ரீஸ்ட்டுகளுக்குள் (sacristy) பூட்டப்பட்டு மாண்புடன் பாதுகாக்கப்படுவதுபோல, நமது மனப்பேழைக்குள் அடைத்து வைத்திருக்கும் சில நினைவுகளை அவ்வப்போது எடுத்துப் பார்த்து, நமது நைந்த மனதினை நாம் சொஸ்தமாக்கிக் கொள்வதில்லையா?
தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் வெவ்வேறு காலகட்டத்தில், நான் சந்தித்த மனிதர்கள் எனக்குத்தந்து சென்ற நினைவுகளும் அனுபவங்களுமே! நீங்கள் கதைகளை வாசிக்கிறபோது, உங்களை அதில் கண்டு கொள்ள முடிந்தால் நீங்கள் எனக்கு திருப்பண்டமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உண்மையில், இங்கு யாரும் யாரோ ஒருவருக்கு, அவரறியாமலே திருப்பண்டமாக இருந்துவிடுகிறார்.
யோசித்துப் பாருங்கள்...
நீங்கள் யாருடைய திருப்பண்டம்?
திருப்பண்டம் - Product Reviews
No reviews available

