தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்

0 reviews  

Author: .

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  45.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்

தம் சகோதரர்களைப் பற்றிய விவரங்களை அறிய முடியாமல் தவித்த தீட்சிதர் மதுரை மீனாட்சி ஆலயத்துக்குச் சென்று திருச்சந்நிதி முன்பு அமர்ந்து பல தேவி கீர்த்தனங்களைப் பாடி கண்ணீர் மல்கினார்.இறுதியாக மாமவ மீனாட்சி என்ற வராளி கிருதியைப் பாடி முடிப்பதற்குள் சிவாசாரியர்களும் தரிசிக்க வந்தவர்களுமாக அவரைச் சுற்றி ஒழு பெருங்கூட்டமே கூடியது.அப்போது ஒரு அர்ச்சகர் தீட்சிரிடம் ," சுவாமி ...தாங்கள் பாடிய சில பாடல்கள் இதற்கு முன் இந்த கோயிலில் இந்த பாடக் கேட்டிருக்கிறோம்.அவர்கள் திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.தாங்களும் அங்கிருந்து தான் வருகிறீர்களா?"என்று கேட்டார்.அதற்கு சீடரே பதிலளித்தார்."இவர் என் குரு.நீங்கள் சொன்ன பாடகர்களின் மூத்த சகோதரர் தான் இவர்.இந்தக் கீர்த்தனைகளை இயற்றிவர் இவரே!"இத்தனை நேரம் உள்ளம் உருகப் பாடி அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியவர் முத்துசாமி தீட்சிதரே என்பதை அறிந்து கொண்டதும் அங்கிருந்தவர்கள் அப்படியே அவர் பாதத்தில் விழுந்து வணங்கினார்.முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசுவாமி தீட்சதர் ராமேச்வர யாத்திரை சென்றுள்ளதாகவும் விரைவில் திரும்பி வருவார்..அதுவரை தீட்சிதர் மதுரையிலேயே தங்க வேண்டும் என்று தீட்சிதரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர் அர்ச்சகர்கள்.அதற்கு தீட்சிதரும் ஒப்புக் கொண்டார்.

Product Reviews


No reviews available