தெவம்
தெவம்
கொங்குச்சீமையின் கிரிப்பட்டி, மக்கம்பட்டி கிராமங்களின் கூட்டு ஆன்மாவாகத் திகழும் கருப்பசாமிக்கு 'தெவம்! சாட்டப்படுகிறது.
பிழைப்புக்காகவும், வறுமைக்காகவும் திசைக்கொன்றாய் சிதறிப்போன பங்காளிகளைத் தன் வேர்களை நோக்கி இழுக்கிறது அந்த அழைப்பு
சொந்த ஊரில் நிலம் இருந்தும், தெவத்திற்காக ஆடு வாங்கப் பணம் தேடி அந்நிய வயல்களில் கூலி வேலைக்குச் செல்லும் பழனியின் கண்ணீர்... மலை உச்சிகளில் விறகு சுமக்கும் பச்சியம்மாவின் தவிப்பு..
பனி படர்ந்த சிக்கிம் எல்லையில் நின்றுகொண்டு தன் நிலத்துச் செம்பூவைத் தேடும் தேவாவின் ஏக்கம்... என நாவல் எளிய மனிதர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியலைப் பதிவு செய்கிறது.
அதிகாரத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான போராட்டம், ஜாதிய அடுக்குகள், கைவிடப்பட்ட நிலங்களின் மௌளனம் என விரியும் இந்தக் கதையில், தன் மக்களின் துயர் துடைக்கக் கருப்பசாமி சவுக்கோடு இறங்கி வரும் தருணம் அதிரவைக்கும் அனுபவம்.
தெவம் - Product Reviews
No reviews available

