தாம்பூலம் முதல் திருமணம் வரை

0 reviews  

Author: யுவகிருஷ்ணா

Category: குறுநாவல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  190.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தாம்பூலம் முதல் திருமணம் வரை

சென்னையில் வசிக்கும் இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம். பிறந்து வளர்ந்ததும் இப்போது வசிப்பதும் மடிப்பாக்கத்தில். விளம்பரத்துறையில் பல்லாண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ‘தினமலர்’ நாளிதழிலும், ‘புதிய தலைமுறை’ வார இதழிலும் பணிபுரிந்துவிட்டு இப்போது ‘வண்ணத்திரை’  மற்றும் ‘தினகரன் வசந்தம்’ இதழ்களுக்கு முதன்மை ஆசிரியராக இருக்கிறார். ‘சுஜாதா’ விருது பெற்றவர். அச்சுப் பத்திரிகை தவிர ‘www.luckylookonline.com’ என்ற தனது இணையத்தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

நூல் குறிப்பு :

ஒரு பத்திரிகையாளர் நூல் எழுதினால் எப்படியிருக்கும் என்பதற்கு இப்புத்தகமே உதாரணம்.தமிழகத்தில் எண்ணற்ற சமூகங்கள் இருக்கின்றன. அதில் பெரும்
பாலான சமூகங்களில் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எந்த மாதிரியான சடங்குகள் நடக்கின்றன; நடைபெறுகின்றன என்பது இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமான விஷயம், சடங்கு சம்பிரதாயங்களின் தோற்றம், வரலாறு எல்லாம் இதில் ஆராயப்படவில்லை என்பது. மாறாக உள்ளது உள்ளபடி எழுதப்பட்டிருக்கிறது. எந்தவொரு இடத்திலும் ஆசிரியர் சார்பு நிலையை எடுக்கவில்லை. தனது கருத்தை முன்வைக்கவில்லை.அதனாலேயே இந்நூல் ஆவணமாக மாறியிருக்கிறது. இன்றைய
தமிழகத்தைப் புரிந்துகொள்வதற்கான வாசலையும் திறந்து வைத்திருக்கிறது.

தாம்பூலம் முதல் திருமணம் வரை - Product Reviews


No reviews available