சனாதனம் அறிவோம் (பாகம்-1&2)
சனாதனம் அறிவோம் (பாகம்-1&2)
சனாதனம் அறிவோம் என்பது ஒரு மெய்யியல் கோட்பாடு அல்ல. மாறாக ஒரு ஆஸ்திக இந்துவின் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் என்றும், இவ்விதிமுறைகள் பழமையான நூல்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் தொகுத்துள்ளார் ஆசிரியர். சனாதன நெறி என்பது ஒற்றை நூலில் பகவத் கீதை போல எழுதப்பட்டதல்ல என்ற புரிதலை உருவாக்கும் இவர், அதன் அடிப்படை நோக்கம் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்துவதே என்பதை பட்டவர்த்தனமாக்குகின்றார்.
இன்றளவில் சாதிய தாக்குதல்களுக்கு முக்கிய விதையிட்டது ஆதி மூலமாகிய சனாதனம்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக செ.தினகர ஞானகுருசாமி நிலைநாட்ட எடுத்துள்ள இம்முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைந்ததாகக் கருதுகின்றேன்.
பேரா.இரா.முரளி
எனது தனிப்பட்ட கருத்தை வலியுறுத்துவதைவிட இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வாயிலாக வாசிக்கும் வாசகர்களே அதை முடிவு செய்து கொள்ளட்டும் என்பது ஆரோக்கியமானது என எண்ணுகிறேன். அதனால்தான் எனது கருத்துக்களை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யாரெல்லாம் தன்னை சனாதனியாக, வைதிகனாக, வேதியனாக, Core ஹிந்துவாக, ஹிந்துத்துவனாக, சைவனாக. வைணவனாக. சாதி ஹிந்துவாக, ஆன்மீகவாதியாக, வேதாந்தியாக. சித்தாந்தியாக, அத்வைதியாக. துவைதியாக. விசிஷ்டாதுவைதியாக, உயர் சாதிக்காரனாக எண்ணுகிறார்களோ அவர்கள் இந்நூலை வாசிக்க வேண்டும் என மனதார விரும்புகிறேன்.
செ.தினகர ஞானகுருசாமி
சனாதனம் அறிவோம் (பாகம்-1&2) - Product Reviews
No reviews available

