பத்துப்பாட்டு அமைப்புமுறை
பத்துப்பாட்டு அமைப்புமுறை
சங்க இலக்கியங்களைத் தொல்காப்பியத் துணையில்லாமல் வாசிப்பதன் அவசியம் குறித்த உரையாடலைத் தொடர்ந்து முன்வைத்து வந்தவர் கா.சிவத்தம்பி அவர்கள். அவர்களுக்கு முன் பின் எனப் பல அறிஞர்கள் மேற்கத்திய இலக்கியங்களையும், நவீனக் கோட்பாடுகளையும் கொண்டு ஒப்பிட்டும் பொறுத்தியும் ஆராய்ந்து உள்ளனர். அவர்களில் கா.கைலாசபதி. குளோரியா சுந்தரமதி, தமிழவன், விஷ்ணுகுமாரன் முதலானவர்களின் ஆய்வுகள் என்னை மிகவும் ஈர்த்தன. நவீனச் சிந்தனை போக்குகள் வழி சங்க இலக்கியத்தை அணுகுதல் என்பது காலத்தின் அவசியம் என எனக்குப்பட்டது.
எனவே. மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வுகளின் தொடர்ச்சியாக 'விளாடிமர் பிராப் அவர்களின் பொருட்பகுப்பாய்வு என்ற ஆய்வு அணுகுமுறை கொண்டு பத்துப்பாட்டுப் பாடல்களின் அமைப்பு முறை குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டது இந்த ஆய்வேடு.
பத்துப்பாட்டிற்கு ஏன் பத்துப்பாட்டு என்று பெயர் வந்தது? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ள நிலையில் இந்தப் பத்துப் பாடல்கள் மட்டும் ஏன் தனியாகத் தொகுக்கப்பட்டன? குறிப்பாக. வையாபுரி பிள்ளை அவர்கள் கூறுவது போன்று திருமுருகாற்றுப்படை நீங்களான 9 பாடல்களும் எந்த வகைப் பாட்டின் அடிப்படையில் நம்முடைய முன்னோர்கள் ஒரே தொகுப்பாகத் தொகுத்தார்கள்? இந்தப் பாடல்களுக்கு இடையில் ஏதேனும் பொருத்தமான அமைப்பு கூறுகள் இருக்கின்றனவா? என்பது போன்ற வினாக்களை மனதில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்படி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைத் தமிழரின் ஆய்வுச் சிந்தனையும். இலக்கியம் குறித்தான அவர்களது விசாலமான பார்வையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பாடல்களைத் தொகுத்துப் பகுத்து அவற்றை முறையாக வகைப்படுத்திய அந்த வகைப்பாட்டில் ஏதோ ஒரு உத்தியை அவர்கள் அந்த காலகட்டத்திலேயே பின்பற்றி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
பத்துப்பாட்டு அமைப்புமுறை - Product Reviews
No reviews available

