பாப்லோ நெரூதா கவிதைகள்

0 reviews  

Author: சுகுமாரன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  290.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பாப்லோ நெரூதா கவிதைகள்

இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் பாப்லோ நெரூதாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு 1924 இல், அவரது இருபதாம் வயதில் வெளியான இந்த நூலே அவருக்கு இலக்கியப் புகழையம் வாசக வரவேற்பையம் பெற்றுத் தந்தது.
பால்யம் முதல் இளம் பருவம் வரையான தனது காதலையும் காமத்தையும் இந்தக் கவிதைகளில் கொண்டாடுகிறார் நெரூதா வாழ்நாள் முழுவதும் தீராக் காதலுடனிருந்த அவரது பிற்காலக் கவிதைகளுக்கும் இந்தக் காதல்களே எழுச்சியும் தொடர்ச்சியும் தந்தவை.
நெரூதாவின் அனுபவத்தில் பெண் மானுடப் பிறவி மட்டுமல்ல இயற்கையின் முடிவில்லாத வித்தை காதலின் பித்துடனும் காமத்தின் ஆவேசத்துடனும் இயற்கை மீதான வழிபாட்டுணர்வுடனும் இந்தக் கவிதைகளில் பெண் போற்றப்படுகிறான் பழிக்கப்படுகிறான் காதல் மனமாகவும் காமத் துணையாகவும் சிந்தரிக்கப்படும் பெண் கடலாகவும் வானாகவும் மனையாகவும் மரமாகவும் மலராகவும் நிலவாகவும் நட்சத்திரமாகவும் இயற்கை இருப்பையும் பெறுகிறாள்.
கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த காதல் கவிதைத் தொகுப்புகளில் மகத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது இந்தநூல்.

பாப்லோ நெரூதா கவிதைகள் - Product Reviews


No reviews available