இறவாக் காவியம் (புதுக்கவிதை வடிவில் வரலாறு)
இறவாக் காவியம் (புதுக்கவிதை வடிவில் வரலாறு)
வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதப் புனிதர் இயேசு! அவர் மீட்பராகவோ, போதகராகவோ, சிந்தனையாளராகவோ, தத்துவ ஞானியாகவோ, அன்பின் வடிவமாகவோ எல்லோரையும், எல்லாவற்றையும் ஏதோ ஒரு விதத்தில் தொட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த நூல், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும், கவித்துவமாகவும், வசீகர வடிவமைப்பில் பேசுகிறது. இயேசுவின் பிறப்பு முதல், உயிர்ப்பு வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் அற்புதமான புதுக்கவிதை பாதையில் பயணிக்கின்றன. இயேசுவின் போதனைகளும், புதுமைகளும் ஈர்க்கும் கவி நடையில் எளிமையாய் இதயத்தில் வந்து அமர்கின்றன. நூலாசிரியர் சேவியர் கிறித்தவ இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு கிறித்தவ நூல்களை எழுதியவர். எனவே இறையியல் ஆழத்தைச் சுமந்தபடி இந்த நூல் தனிக் கவனம் பிடிக்கிறது. கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் போல இந்த நூலும் கிறித்தவ இலக்கிய உலகில் மட்டுமல்லாது, கிறித்தவ வரலாற்று வரிசையிலும் தனியிடம் பிடிக்கும் என்பது உறுதி.
இறவாக் காவியம் (புதுக்கவிதை வடிவில் வரலாறு) - Product Reviews
No reviews available

