ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே!
Author: பானு முஷ்தாக்;மொழிபெயர்ப்பாளர்: ப. சகதேவன்
Category: சிறுகதைகள்
Available - Shipped in 5-6 business days
ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே!
2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்ற பானு முஷ்தாக் கதைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள பன்னிரண்டு கதைகளும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டவை.
பானு முஷ்தாக்கின் கதையுலகம் இரு அச்சுக்களில் சுழல்கிறது. ஒரே சமயத்தில் மதத்தையும் பாலினத்தையும் சார்ந்தது. இஸ்லாமியப் பெண்கள், பெண்களாக இருப்பதனாலேயே அடையும் துயரங்களையும் மதக்கட்டுப்பாடுகள் மூலம் அனுபவிக்கும் இடர்களையும் தீராக் கோபத்துடனும் தீவிர நகைச்சுவையுடனும் இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பாலியல், மத அடக்கு முறைகளுக்கு எதிராக எழுத்திலும் சமூகப் பணி வாயிலாகவும் செயலாற்றிவரும் பானு முஷ்தாக் கன்னட முற்போக்கு எழுத்தாளர்களில் முன்னணி ஆளுமையாகக் கருதப்படுகிறார்.
ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே! - Product Reviews
No reviews available

