மிச்சம் மீதி (ஓர் அனுபவக் கணக்கு)

Author: எம்.பி.மாரியப்பன், ஆனந்த் பாண்டியன்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
மிச்சம் மீதி (ஓர் அனுபவக் கணக்கு)
பத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதனின் கதை இது. தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும்பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்ட புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவகையில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இவ்வளையாட்டின் எழுத்து வடிவமே இந்நூல்
ஒரு கண்ணாடித் தகடை ஒளி ஊடறுத்துச் சிதறிப் பாய்வதைப் போல உலக அரசியல் நிகழ்வுகளும், கால ஓட்டங்களும் ஒரு சாமானியனின் வாழ்வை ஊடறுத்து எப்படியெல்லாம் பயணிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிற கதை இது. புறநிகழ்வுகளும் தற்செயல்களும் தனிமனித வாழ்வைத் தம்போக்கில் எப்படியெல்லாம் கையாளுகின்றன என்பதை இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும்பொழுதுதான் துல்லியமாகத் தெரிகிறது.
மிச்சம் மீதி (ஓர் அனுபவக் கணக்கு) - Product Reviews
No reviews available