குறிஞ்சிப்பாட்டு(இது காதலின் அறம்)
குறிஞ்சிப்பாட்டு(இது காதலின் அறம்)
இன்றைய இணைய கால வாசகர்களுக்கு ஏற்பக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டுக்கு ‘இது காதலின் அறம்' என்ற இணைத் தலைப்புடன் திருமதி விஜயானந்தலட்சுமியின் விளக்கம் இப்போது வெளிவந்துள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் மெய்யாகவே தமிழுக்குக் கிடைத்த புது வரவு என்றே சொல்லலாம். பண்டைத் தமிழ் நூல்களுக்கு இதுவரை வந்துள்ள விளக்க நூல்களின் அமைப்பும் அவை பொருள் கூறும் முறையும் நாம் நன்கு அறிந்தவையே. அத்தகைய பொதுப் போக்கினின்றும் விலகி, தாம் அமைத்த புதுத் தடத்தில் இந்நூலை நடத்திச் செல்கிறார் ஆசிரியர். செறிவான செய்யுள் நடையிலான சங்கப் பாடல்களை அவற்றின் செவ்வி குறையாமல் இலகுவாக விளக்குவது என்பது அரிய கலை. அது 'வித்தகர்கல்லால் அரிது'. அது கைகூடிவிட்டால் சங்க நூல்களின் பக்கம் வராமல் விலகி நிற்பாரையும் நம் பக்கம் இழுப்பது பூக் கொய்வது போல் எளிதாகி விடும். அந்த வித்தகம் வெளிப்பட்டிருப்பதை இந்நூலைப் பயில்வார் உணரவே செய்வர். - பேராசிரியர். ம.பெ.சீனிவாசன்
குறிஞ்சிப்பாட்டு(இது காதலின் அறம்) - Product Reviews
No reviews available

