குறள் கூறும் அறம்
குறள் கூறும் அறம்
உலகில் இலக்கிய வளம் கொண்ட ஒரு சில மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கியங்களும், நூல்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இயற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை உலக மக்களின் வாழ்வை செம்மைப் படுத்துகின்ற கருத்துக்கள் கொண்ட ஒரு மிகச்சிறந்த தமிழ் நூலாகக் கருதப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய புகழ் பெற்ற நூலான திருக்குறளுக்கு மிருதியான சிறப்புகள் உள்ளன.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு: அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன். மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக் கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும்.
குறள் கூறும் அறம் - Product Reviews
No reviews available

