குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
சினிமாவில் நீ பார்ப்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கை அதைவிடச் சிக்கலானது.
- சினிமா பாரடிஸோ
பல்லாயிரம் கதைகள் வாழும், பல கோடி உணர்வுகளைப் பேசும் சினிமா எனும் கனவுலகிற்குள் நுழையப் போராடும் எண்ணற்றோரின் கதையை இந்த நாவல் பேசுகிறது.
கண்களில் கனவு பூசியிருப்பவனின் பார்வைக்கு இந்த உலகம் ஒருபோதும் சாதாரணமாகத் தெரிவதில்லை. அது காட்சிகளும், கவிதைகளுமாய் விரிந்து கிடக்கும் ஓர் அற்புதக் களஞ்சியம். நெஞ்சில் நம்பிக்கையும் கண்களில் கனவுகளும் ஏந்தி சென்னைக்கு ரயிலேறும் பல கோடி இளைஞர்களின் வாழ்வையும், அடைக்கப்படும் கதவுகள், தளர்வுறும் தன்னம்பிக்கை, உலகத்தின் கேலிப் பேச்சுகள் என அவர்கள் கடந்து வர வேண்டிய சவால்களையும், பெரிய திரையில் தன் பிம்பத்தைப் பார்க்கத் துடிக்கும் கலைஞர்களின் போராட்டத்தையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் கதை இது.
‘வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டி'யில் முதலிடம் பெற்ற நாவல் இது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி - Product Reviews
No reviews available

