காமத்திப்பூ

0 reviews  

Author: சுகிர்தராணி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காமத்திப்பூ

துளித் துளித் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பில் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்தச் சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது; இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது; பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிமாணத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம்.

தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.

காமத்திப்பூ - Product Reviews


No reviews available