இறுதி மூச்சின் கடைசி வார்த்தை
இறுதி மூச்சின் கடைசி வார்த்தை
நம்மை ஆற்றுப்படுத்தும் பூங்காக்கள், ஏன் தூய்மைப் பணியாளர்களுக்கு வேறொரு முகத்தைக் காட்டுகின்றன? உரிக்கப்படாத வெங்காயம், ஏன் சிலரின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது? என தோழர் மதி கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் பதில்களின்றி நம்மைப் பரிகாசிக்கின்றன.
ஒருவன் உலகில் வாழும்வரை அவனை அடக்கி, ஒடுக்கி, குரூரத் திருப்தி அடையும் சாதி வெறி, அவன் உலகைவிட்டுப் பிரிந்த பிறகும் கூட தன் வெறி அடங்காமல் அவன் இறுதியாய்ச் செல்லும் பாதையையும் மறுக்கிறது. மறுக்கப்பட்ட அச்சுடுகாட்டுப் பாதையின் கோடியிலேயே தன் உயிரை மாய்த்துக்கொள்கிறது சமூக நீதி.
நம்மை அடையாளமற்றிருக்க இச்சமூகம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை; போர்த்திக்கொண்டிருக்கும் திராவிடப் போர்வையை உருவி, தமிழனாய் திலகமிட்டு, சாதி மாலையை அணிவிக்கத் தவறுவதுமில்லை. நாம் பூக்களைப் பரிசளித்தால் நமக்குப் பூங்கொத்துதானே பரிசளிக்கப்பட வேண்டும்? மாறாகக் குருதியைப் பரிசாகப் பெறும் அவல நிலையை என்னவென்பது?
- ஆமினா முஹம்மத்
இறுதி மூச்சின் கடைசி வார்த்தை - Product Reviews
No reviews available

