FD kaaviyam-84105.jpg

காவியம்

0 reviews  

Author: ஜெயமோகன்

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  1300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காவியம்

சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும்  பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்மூன்று காவியங்களில் இருந்தே பிற்காலக் காவியங்கள் எல்லாம் உருவாயின. குணாட்யரின் பெருங்காவியம் மற்ற இரண்டைவிடவும் பலமடங்கு பெரியது. அது அழிந்துவிட்டது. அதைப்பற்றிய தொன்மங்கள் பல. குணாட்யரே அதை அழித்துவிட்டார் என்று கதைகள் சொல்கின்றன.

 

முதன்மைப் பெருங்காவியங்கள் அனைத்திலும் ஒரு ‘தலித்’ அம்சம் உள்ளது. வால்மீகி பிறப்பால் தலித். வியாசன் மீனவப்பெண்ணின் மகன். குணாட்யர் பழங்குடி மொழியில் தன் காவியத்தை எழுதியவர். அந்த பண்பாட்டு அடிப்படையிலிருந்து தொடங்கும் இந்நாவல் சமகால வாழ்வின் குடும்ப வன்முறை, சாதிய அரசியல் என பல தளங்களைத் தொட்டு விரிகிறது. நேற்றும் இன்றும் முயங்கும் களத்தில் கதைகளுக்குள் கதைகளின் அடுக்கு என செல்லும் இந்நாவல் ஒரே வீச்சில் வாசிக்கத்தக்க விரைவோட்டமும் கொண்டது.

காவியம் - Product Reviews


No reviews available