ஜனநாயகன்(பிம்பச் சிறை 2.0)

0 reviews  

Author: ர. முகமது இல்யாஸ்

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  240.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஜனநாயகன்(பிம்பச் சிறை 2.0)

தமிழ்த் திரைப்பட நாயகன் என்பவன் வெறும் நடிகன் மட்டுமல்லன். அவன் வரலாற்றுரீதியாக திராவிடக் கருத்தியலாலும், வெகுஜன திரைப்பட ஆக்கத்தின் அழகியல் பண்புகளாலும், அதனோடு தொடர்புடைய திரைப்பட-அரசியல் கட்டமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகிறான். இவை அனைத்துமே ஒரே நேர்க்கோட்டில் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில், அவன் வெகுஜன மக்களின் பிரதிநிதியாக வெளிப்படுகிறான்.

தமிழ்த் திரை வரலாற்றில் விஜயின் இடம், தமிழ்த் திரை நட்சத்திரங்களின் ஒவ்வொரு காலகட்டத்தின் வளர்ச்சியில் விஜய் அடைந்திருக்கும் நிலை, விஜயின் திரைப்பயணம், விஜயின் திரை நட்சத்திரப் பிம்பக் கட்டமைப்பு, அதீத ஊடகமயப்பட்ட சூழலில் விஜயின் இயங்குமுறை, இந்துத் தேசியச் சூழலில் விஜயின் அரசியல் செயற்பாடு, தமிழ்நாட்டின் சமகால வெகுஜனவிய அரசியலில் விஜயின் பங்கு, மாறியிருக்கும் அரசியல் தொடர்பியலில் விஜயின் உத்திகள் முதலானவற்றை ஊடகவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகியவற்றின் வழியாக ஆராய்ந்திருக்கிறது இந்நூல். அந்த வகையில் இந்த நூல், விஜயின் பிம்பம் என்பதில் வெகுமக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதைப் பேசும் அதே வேளையில், அதன் கலாச்சாரக் காரணங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

திரைப்படங்கள், திரை வரலாறு, திரை நட்சத்திரம் என்னும் ஊடகப் பிரதி, திரை நட்சத்திர வரலாறு, காட்சி ஊடகம், இணைய ஊடகம், அரசியல் வியூக வகுப்பாளர் என்னும் ஊடக மையம் முதலான பல்வேறு சமகால ஊடக நிறுவனங்களைக் கணக்கில் கொண்டு தமிழ்ச் சமூகத்தை ஆராய முயன்றுள்ளது இந்நூல்.
 

ஜனநாயகன்(பிம்பச் சிறை 2.0) - Product Reviews


No reviews available