வன்னி யுத்தம்

0 reviews  

Author: அப்பு

Category: அரசியல்

Out of Stock - Not Available

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வன்னி யுத்தம்

 கடந்த ஐந்து சகாப்தங்களுக்கும் மேலாக சிங்களப் பேரினவாத சக்திகள், ஜனநாயக முகமூடியை அணிந்துகொண்டன: இலங்கைத்தீவில் ஒற்றை சிங்கள பௌத்தப் பேரினவாத அரசை அமைப்பதிலேயே கவனமாக இருந்தன. எவர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றபோதிலும், நீண்ட வரலாறுடைய தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை அழித்தொழிப்பதிலும், அவர்களின் பொருளதார வளமையை சீர்குலைப்பதிலுமே கவனமாக இருந்தன. தமிழ் வலதுசாரி சக்திகளும் இதற்கு துணை போயின. அதன் கூர்மையான வடிவம்தான் ‘இறுதி யுத்தம்’ என்ற மாபெரும் மனிதப் பேரழிவு.
அரசியல் சக்திகள், மானுட வதைகளையும் கொடூரக் கொலைகளையும் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே கணக்குப் போடுகின்றன.அந்த மண்ணின் மைந்தர்களுக்கு ஏற்பட்ட ஆன்ம அழிவை நினைப்போர் வெகு சிலர்.
‘வரலாறு’ என்பது வாய்ச்சவடலாக இல்லாமல், வாழும் சமூகத்தின் வலியாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். மனிதர்கள் அதிகார வெறிக்கு எதிராகப் போரிட வேண்டும். இதுதான் எதிர்கால சமூகத்தை நம் மண்ணை மீட்டெடுக்கும் படையாக மாற்றும் இத்தகைய நூல்கள் அவசியமான போர்வாள்கள்.
இப்படிப்பட்ட நூல்கள் ஐரோப்பிய நாடுகளில் நிறைந்து கிடக்கின்றன. காரணம், அவர்களுக்கு ஒரு ஹிட்லர் இருந்தான். நமக்கு ஒரு ராஜபக்க்ஷே இருக்கிறான். மண்ணை இழப்பதன் மரணவலியைப் புரிந்துகொள்ள இந்த நூல் ஒரு பாடமாக இருக்கும். மானுட அவலங்களைப் பதிவு செய்வதன் மூலம் மனிதம் காப்போம்.
எழுதாததற்குப் பெயர் தேடும் ‘படைப்பாளிகளுக்கு!’ மத்தியில் தன் இயற்பெயரைக்கூட வெளியிட விரும்பாமல் இந்த நூலைப் படைத்திருக்கும் அவருக்கு, நான் தலை வணங்குகிறேன்.
இயக்குநர் மணிவண்ணன்

வன்னி யுத்தம் - Product Reviews


No reviews available