இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான் - கறுப்பு இலக்கியப் பதிவுகள் : கலை இலக்கியம்

0 reviews  

Author: ஊ. முத்துப்பாண்டி

Category: இலக்கியம்

Available - Shipped in 5-6 business days

Price:  450.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான் - கறுப்பு இலக்கியப் பதிவுகள் : கலை இலக்கியம்

உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான கறுப்பிலக்கிய ஆக்கங்கள் 1980களுக்குப் பிறகு தமிழில் வரத் தொடங்கின. 1990களுக்குப் பிறகு அதன் பரப்பு விரிவடைந்ததோடு தமிழில் தலித்திய, பெண்ணிய எழுத்துகளின் மீதும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடு இதழில் வெளியான மொழியாக்கங்களுக்கு அந்தத் தாக்கத்தில் பெரும் பங்குண்டு.

1988 தொடங்கி 2025 வரையிலான காலச்சுவடு இதழ்களில்  வெளியான கறுப்பிலக்கியம், அவை தொடர்பான எழுத்துகள் முதன்முறையாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் கறுப்பிலக்கியத்தில் கலை- இலக்கியம் சார்ந்த புனைவுகளும் அ-புனைவுகளும் இடம்பெற்றுள்ளன. இப்பதிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு இந்த நூல்.

2025இல் காலச்சுவடு பதிப்பகம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2024 டிசம்பரில் காலச்சுவடு 300ஆவது இதழ் வெளியானது.  இந்தத் தருணங்களை முன்னிட்டுக் காலச்சுவடு இதழில் வெளியான முக்கியமான பதிவுகளை நூல்களாகத் தொகுக்கும் திட்டத்தின் தொடக்கமாக இந்தத் தொகுப்பு வெளியாகிறது.

இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான் - கறுப்பு இலக்கியப் பதிவுகள் : கலை இலக்கியம் - Product Reviews


No reviews available