ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்

0 reviews  

Author: மார்க் ட்வைன் : தமிழில் : பிரேமா இரவிச்சந்திரன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்

வாசிகும்போது நம் முதுகில் றெக்கை முளைக்கச் செய்யும் கற்பனையின் சாகசம் நிரம்பிய நாவல் இது, சிறுவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் வயதானவர்கள் என அனைவரும் படிக்கும் வகையில் எழுதுவதுதான் இதன் ஆசிரியர் மார்க் ட்வைன் அவர்களின் சிறப்பு. எனது பதினோராம் வகுப்பில் பள்ளி நூலகத்தில் ஆங்கில மொழி வளத்திற்காக ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நூலகம் சென்று எடுத்து வந்த முதல் புத்தகம் இது .

காலாண்டு விடுமுறை முழுக்க மழைக்காலத்தில் அப்போதிருந்த ஆங்கில அறிவுக்கேற்ப வாசித்தபோதே என் இதயத்தை மகிழ்வித்த அற்புத நூல். பிற்பாடு நான் தீவிர வாசிப்பாளனாக மாறியபின் இது போன்ற ஓர் உலகத்தை ஏன் தமிழில் நம்மால் உருவாக்க முடியவில்லை என ஏங்கியிருக்கிறேன். அதன் குறை தீரும் வகையில் என் வேண்டுகோளுகேற்ப தமிழிலேயே அதை அழகுற மொழிபெயர்த்து தந்திருக்கிறார் பிரேமா இரவிச்சந்திரன் அவர்கள், மூலத்தை வாசிக்கும்போது எனக்குள் உருவான மகிழ்ச்சி, அப்படியே அவரது

எளிமையான அழகான மொழிபெயர்ப்பை வாசிக்கும் போதும் ஏற்பட்டது.

மேலும் நவீன உலக சிந்தனையுடன் பொருந்தும் வகையில் சில சொற்களை மூல அர்த்தமும் சுவையும் கெடாமல் சிற்பி போல நுணுக்கமாக செதுக்கியிருப்பது ஒரு பதிப்பாளனாக என்னை இன்னும் பெருமைப்படுத்துகிறது.

அஜயன் பாலா

பதிப்பாளர்

ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள் - Product Reviews


No reviews available