ஹா-ரி-தி நீ-லிதா(இரட்டைப் புதினம்)
ஹா-ரி-தி நீ-லிதா(இரட்டைப் புதினம்)
கீழ்த்திசை நாடுகளின் பதினாறு வகைக் காற்றுகள் உராய்ந்து தீட்டிய மடக்கு ஓலைக் கன்னிகளின் கதைப் புலம் இது; வெகுளி நிறைந்த ஐநூறு கதைக் குழந்தைகளைக் கருவாகச் சுமக்கும் ‘ஹா-ரி-தி நீ-லி-தா’ — ஒரு நவீனப் புராணம்.
இரு மாவடுப் பிளவுகளுக்குள் பேயவளின் திருவிழிகள் தோற்றமாகித் துடிக்கின்றன. திருவாலங்காட்டிற்கு அருகிலுள்ள பழையனூர் நீலியின் கற்றாழைப் பிள்ளைகள் — அவர்களின் காதை, வெகுளி, வேட்கை என யாவும் இந்த நாவலின் குறியீடுகளாக உருமாறுகின்றன.
ராஜகிரகத்தில் அவதரித்த போதிசத்துவரின் பெண் வடிவமே ஹா-ரி-தி. அவளுடைய ஐநூறாவது கடைக்குட்டியான நிச்சரினை, அவளுக்கே தெரியாமல் ராஜகிரகப் பெருந்தெருவிலிருந்து புத்தர் தடுத்தாட் கொள்கிறார். பிச்சா அகலில் வைத்து, நிசிதிகைக் கனியூட்டி அவர் வளர்க்கும் அந்தத் தருணம், பேரறத்தின் கருணையும் மழலைத் தன்மையும் சந்திக்கும் ஒரு மகா மையமாகிறது.
நந்தர்களின் கங்கைச் சமவெளி நாகரிகமும், நம்முடைய எட்டாம் பிறை வடிவக் கண்மாய் நாகரிகமும் இந்த நாவலில் அத்தியாயங்களாகப் பக்கம் பக்கமாக விரிகின்றன. இந்த மழைமறைவு நிலப்பரப்பில், கதாபாத்திரங்கள் வாழும் ஊர்க்கிணறுகளில் குருவி குடிக்கக்கூட ஒரு சொட்டு நீரில்லை.
பதினெட்டுப் பெயர்கொண்ட கதை நீலிகள் சென்ற பாதையெங்கும் உலர்ந்த காற்றே எஞ்சுகிறது. பெண்களின் நீர்க் குணங்களில், கதையைச் சொல்லும் ஒற்றை மிடறு — மழைத்துளிகளைச் சேகரித்து வரும் ஒரு சிறு மிடறு. இந்த எரியும் சமவெளியில், ‘சொற்களே’ பெண்களின் தாகம் தீர்க்கும் சிறு மிடறாகின்றன.
வாய்மொழி மரபும் கவித்துவச் சொல்லாட்சியும் இணையும் ‘ஹா-ரி-தி நீ-லி-தா’, இன்றைய வாசகர்கள் கண்டடைய வேண்டிய ஒரு மகத்தான இரட்டைப் புதினம்.
ஹா-ரி-தி நீ-லிதா(இரட்டைப் புதினம்) - Product Reviews
No reviews available

