தெய்வநல்லூர் கதைகள்
தெய்வநல்லூர் கதைகள்
பால்யத்தின் வண்ணங்கள் நிறையாத வாழ்வு இல்லாதவரே இல்லை என்றுதான் நமக்கு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. பால்யத்தின் நினைவேக்கங்களை எழுத்தில் கொணரும்போதெல்லாம் இழந்துவிட்ட பொன்னுலகையே அதிகமும் கண்டிருக்கிறோம் நம் நவீன இலக்கியங்களில். பால்யத்தின் வானவில் வாழ்க்கையை எவரால் மறக்கமுடியும்? ஒளிர்ந்தும், பூத்தும் கிடக்கும் வானவில்லின் நிறங்களெல்லாம் கருமையிலிருந்து உருவானவையே. எல்லா நிறங்களையும் கலந்தால் கிடைப்பதும் கருமையே. துளி கருப்பின் கலப்பின்றி வானவில்லின் எந்த நிறம் அமைந்துவிடும்?
வானவில்லின் வண்ணங்களிலிருந்து கருமையைப் பிரித்து நோக்கும் பார்வை மாற்றம் நம்மில் வராமல் போவதில்லை. அப்படி பார்வை மாறும் தருணம்தான் இப்படைப்பில் பேசப்படுகிறது. துளி தயிர் கலக்காமல் பால் உறைவதில்லை. உறையாத பால் திரிந்து போகிறது. துளி தயிர் பாலில் கலப்பது காலத்தின் கையில் இருக்கிறதா? விதியின் கையில் இருக்கிறதா?
தெய்வநல்லூர் கதைகள் - Product Reviews
No reviews available

