சின்னஞ்சிறு பழக்கங்கள்

0 reviews  

Author: ஜேம்ஸ் கிளியர்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  399.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சின்னஞ்சிறு பழக்கங்கள்

தினமும் 1 சதவீதம் சிறப்புறுவதற்கான ஒரு புரட்சிகரமான வழிமுறை

நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால், நீங்கள் பிரம்மாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழுகின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தக்கத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார். அதற்கு அறிவியற்பூர்வமான விளக்கங்களையும் அவர் கொடுக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்கள், முன்னணி நிறுவனத் தலைவர்கள், புகழ்பெற்ற அறிவியலறிஞர்கள் ஆகியோரைப் பற்றிய உத்வேகமூட்டும் கதைகளைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய கோட்பாடுகளை விளக்கும் விதம் சுவாரசியமூட்டுவதாக இருக்கிறது.

இச்சிறு மாற்றங்கள் உங்கள் தொழில்வாழ்க்கையின்மீதும் உங்கள் உறவுகளின்மீதும் உங்கள் தனிப்பட்ட வாழ்வின்மீதும் அளப்பரிய தாக்கம் ஏற்படுத்தி அவற்றைப் பரிபூரணமாக மாற்றும் என்பது உறுதி.

"மோசமான பழக்கங்களை விட்டொழித்து, நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளுவதற்கு உங்களுக்குத் தேவையான

ஓர் எளிய, சுவாரசியமான கையேடு இது

ஆடம் கிரான்ட, பேராசிரியர் மற்றும் பிரபல் நூலாசிரியர்

“நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அணுகுகின்ற விதத்தையும் நீங்கள் வாழுகின்ற விதத்தையும் மாற்றக்கூடிய தனிச்சிறப்புக் கொண்ட ஒரு புத்தகம் இது

ரயன் ஹாலிடே, பிரபல நூலாசிரியர்

சின்னஞ்சிறு பழக்கங்கள் - Product Reviews


No reviews available