கலைஞர் நாடகங்கள் (தொகுதி – 1&2)
கலைஞர் நாடகங்கள் (தொகுதி – 1&2)
தமிழ்நாட்டு அரசியலில் அழுத்தமான தடம் பதித்துள்ள கலைஞர். கலை இலக்கிய ஆக்கத்திலும் தனித்துவமானவர். திராவிட இயக்கக் கருத்தியல் பிரச்சாரத்தின் பகுதியாக நாடகத்தைக் கருதிய கலைஞர் இளமைக்காலத்தில் அவர் எழுதிய நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞரின் படைப்பாக்கத்தில் நாடகமும் திரைப்படமும் சாதனைகள் படைத்துள்ளன. நாடகமாடுதல் இழிவாகக் கருதப்பட்ட காலகட்டத்தில், நாடகத்தில் நடிப்பதை விருப்பமாகக்கொண்ட கலைஞர் அடிப்படையில் கலை மனம் மிக்கவர். கலையின் வழியே வாழ்க்கையின் மேன்மைகளையும் இழிவுகளையும் விசாரித்திடும் கலைஞரின் கலை ஆளுமை, பன்முகத்தன்மையுடையது. கலைஞரின் நாடகங்கள் யதார்த்தத்தை நகலெடுத்திடும் முறையில் துல்லியமான காட்சிகளைச் சித்திரிப்பவை அல்ல. வரலாற்று நாடகத்திலும்கூட சமகாலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கலைஞரின் நாடகப் பிரதி. காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக நாடகம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது ஏற்புடையது அல்ல. மாறாக நாடகம் வாழ்க்கையைச் செம்மையாக்கும் சுத்தியல் என்ற ஜெர்மன் நாடகாசிரியர் ப்ரக்டின் கருத்து, கலைஞரின் நாடகப் படைப்புகளுக்குப் பொருந்துகிறது. வெறுமனே கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்துக் கலைஞருக்கு எதிர்மறையான கருத்து உண்டு. அவருடைய நாடகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பொருண்மைதான் உண்டு. அது சமூக நீதியைக் கண்டறிந்திடும் முயற்சி என்பதுதான்.
கலைஞர் நாடகங்கள் (தொகுதி – 1&2) - Product Reviews
No reviews available

