பக்தித் தமிழ் (சூரியன் பதிப்பகம்)

0 reviews  

Author: என். சொக்கன்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பக்தித் தமிழ் (சூரியன் பதிப்பகம்)

இலக்கியத்தில் தோய்ந்த பக்தியா, பக்தியில் தோய்ந்த பக்தியா என்று பாகுபடுத்த இயலாத வகையில் தமிழைப் பொறுத்தவரை பக்தியும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருக்கின்றன. வைணவத்தை ஆழ்வார்களும், ஆசார்யன்களும் தமிழால் வளப்படுத்தி, பாரெங்கும் பரப்பினார்கள் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சைவமும் அடியார்களால், நாயன்மார்களால் தமிழை ஆதாரமாகக்கொண்டு செழித்து வளர்ந்தது. இங்கே தமிழ், ஒட்டுமொத்தமான பக்தி வளர்ச்சிக்குதான் பயன்பட்டதே தவிர பிரிவினை எதற்கும் வித்திடவே இல்லை என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.அதைவிட பக்தியோடு தானும் வளர்ந்தது, பாமரராலும் எளிதாகஉணரப்பட்டது.

எளிமை, நயம், அரிதான கற்பனை, சந்தம், இலக்கணம் என்று எல்லா வகையிலும் பக்தியின் மேன்மைக்குத் தன்னை வளைத்துக் கொடுத்தது தமிழ். எந்தக் காவியமானாலும் சரி, எந்தக் காப்பியமானாலும் சரி, அதில் ஓரளவேனும் பக்தி கலக்காமலில்லை. இப்படிக் கலந்த பெருமை தமிழுக்கே உண்டு. பக்தி எனும் அமிர்தத்திற்கு, அதன் கொள்கலனாகத் தமிழ் விளங்கியது, விளங்கிவருகிறது என்றால் அது மிகையில்லை. அப்படிப் பக்தியும், தமிழ் நயமும் இயைந்த கட்டுரைகளை திரு என்.சொக்கன் தினகரன் ஆன்மிகம் பலன் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். பக்தியால் தமிழ் வளர்ந்ததா அல்லது தமிழால் பக்தி வளர்ந்ததா என்ற வாக்குவாதத்தை விலக்கிவிட்டு இப்புத்தகத்தைப் படித்தால் பக்தி, தமிழ் இரண்டுமே நம் உள்ளத்தில் ஓங்கி வளரும் என்பது மட்டும் நிச்சயம்.

பக்தித் தமிழ் (சூரியன் பதிப்பகம்) - Product Reviews


No reviews available