அலங்கம்
அலங்கம்
மனிதனும் நாகரிகமும் மிக வேகமாய், அசுரத்தனமாய், வளர்ந்துகொண்டிருக்கிற காலக்கட்டத்தில் நவீனங்களைத் தேடுகிற மனிதனின் பாய்ச்சல் அதிவேகமாய் இருக்கிறது. இந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கிற கதைகள்தாம், ஜார்ஜ் ஜோசப்பின் கதைகள். சமூக அழகுகளைக் காட்சிப்படுத்தக்கூடிய — வலுவான ஒன்றை அடக்கிக் கொண்டிருக்கும் கலைகளைப் போல — உண்மைகளைத் தனக்குள்ளே பொதிந்து வைத்துக்கொண்டிருக்கிற இக்கதைகள், ஊடாடி உட்புக உட்புக ஆனந்தத்தை அள்ளித்தரும் அற்புதமான கதைகள். ஆச்சர்யப்படுத்துகிற, சந்தோஷம் கொள்ளவைக்கிற, நுண்மையான அறிவுகொண்டு செதுக்கி வைக்கப்பட்ட கதைகள் இவை. பேரிருளைத் துளைத்துக்கொண்டு பிரபஞ்சத்தின் ‘ஒளி’யெனத் திகழ்கிற கதைகள். ஆத்மார்த்தமாய் அவற்றை வாசித்து உணர்ந்துகொள்ளும் பட்சத்தில் ஜார்ஜ் ஜோசப் என்னும் கலைஞனோடு நாமும் ஒன்றெனக் கலந்திருப்போம்!
- சி.எம். முத்து
அலங்கம் - Product Reviews
No reviews available

