வீட்டுக்குச் சொந்தக்காரி

0 reviews  

Author: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி ; தமிழில் :எம்.ஏ.சுசீலா

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வீட்டுக்குச் சொந்தக்காரி

மின் தூக்கி வசதி இல்லாத அந்த மாடிகளில் ஏறிச் செல்ல உதவும் இருள் மண்டிய, அழுக்கும், பிசுபிசுப்பும், குப்பை கூளங்களும் மலிந்த படிக்கட்டுகள் இவை பற்றிய குறிப்புகள் இல்லாத தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். அத்தகைய குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வரும் முதியவர் ஒருவர். அங்கே ஒண்டிக் குடித்தனமாக ஒரு அறையில் தங்கிக்கொள்ள வரும் இளைஞன் ஆர்டினோவுக்கு அதை உள் வாடகைக்கு விடுகிறார். அவரது இளம் மனைவி காதரீனாவே இக்குறு நாவலின் நாயகியாக, 'வீட்டுச் சொந்தக்காரி'யாக முன்னிறுத்தப்படுபவள். அந்தத் தம்பதியின் பொருந்தா மண உறவு. அதில் பொதிந்து கிடக்கும் மர்ம முடிச்சுகள், அவற்றையெல்லாம் மீறித் தங்கள் இடத்தில் தங்கிக் கொள்ள வந்த இளைஞன் ஆர்டினோவோடு அவளுக்கு ஏற்படும் காதல், அதைக் காதல் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாதபடி அவளுக்குள் ஏற்படும் மனக்குழப்பங்கள் என்று பலவற்றையும் இந்த நாவலில், பல புதிர்களோடு சேர்த்து நெய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.

வீட்டுக்குச் சொந்தக்காரி - Product Reviews


No reviews available