வேதம் புதுமை செய்த பாரதி
வேதம் புதுமை செய்த பாரதி
வேத நுட்பம் விளங்கிடச் செய்து ‘வேதம் புதுமை செய்’ என்று சொன்னவன் மகாகவி பாரதி. சொன்னவண்ணமே சாதித்தும் காட்டிய பெரும் சிந்தனையாளர் அவர். ஆத்திகர், நாத்திகர் அனைவரும் ஏற்கும்படி தமக்கென்று வகுத்துக் கொண்டிருந்த பாரதியின் புதிய இறையியல் கொள்கையை ஆழமாகவும் விரிவாகவும் பேசுகிறது இந்நூல். வர்ணதர்மம் மனித குல ஒற்றுமைக்கு பொருந்தாது என்பது பாரதியாரின் துணிந்த முடிவு. கூடியுண்ணலையும் கலப்புத் திருமணத்தையும் இன்றைய சமூக சூழ்நிலைக்கான ஒரே தீர்வாக முன்வைக்கிறார் அவர். சமுத்துவ சமுதாயம் எய்திடத் தோன்றிய நல்வேதமே பாரதியின் பாடல்களும் எழுத்துகளும். பாரதியின் படைப்புகளில் நெருப்பென ஒளிரும் வேத நுட்பங்களை அரவிந்தரின் விரிவுரைகளுடன் ஒப்பிட்டு வேதம் புதுமை செய்த பாரதியை நமக்கு அளித்திருக்கும் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் பாராட்டுக்குரியவர். பாரதி ஆய்வில் இந்நூல் இடியுடன் கூடிய மின்னல்.
வேதம் புதுமை செய்த பாரதி - Product Reviews
No reviews available

