வணக்கம் திருவாரூர்
வணக்கம் திருவாரூர்
இந்நூல் திருவாரூர் மண்ணின் ஆத்திகத்தையும் பேசுகிறது; நாத்திகத்தையும் பேசுகிறது. கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் பற்றியும் பேசுகிறது; தமிழிசை முழங்கிய ஆதி மும்மூர்த்திகளைப் பற்றியும் பேசுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி திருவாரூர்க்காரர் என்று பெருமை கொள்கிறது. தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை கோலோச்சியவர் திருவாரூர் மண்ணின் மைந்தன் என்று புகழ் பாடுகிறது. தேவாரம் பாடிய மூவரின் வரலாற்றையும் சொல்கிறது. மனுநீதிச் சோழனின் புராணத்தையும் சொல்கிறது. ஆரூர் கோயிலும், ஆழித் தேரும், அகன்ற கமலாலயமும் கண்முன் காட்சியாகிறது. ஆரூரின் அறிவுச் சின்னம் மேல்நிலைப் பள்ளியின் மேன்மை அனைத்துக்கும் சாட்சியாகிறது. அதனால் இந்த நூல் வணக்கம் திருவாரூர். இந்த நூலில் ஆன்மிகமும் உண்டு; அரசியலும் உண்டு. - சிகரம் ச.செந்தில்நாதன்
வணக்கம் திருவாரூர் - Product Reviews
No reviews available

