காவலன் காவான் எனின்
காவலன் காவான் எனின்
நாஞ்சில்நாடனின் கட்டுரைகளே அவரை ஆழம் மிக்க கதையாசிரியனாக ஆக்குகின்றன என்று விமர்சகனாக நான் எண்ணுகிறேன். அவருடைய பிற்காலக் கதைகளில் வாழ்க்கையின் சித்திரத்தால் மட்டுமே முன்வைக்கப்பட்டு விடத்தக்கவை எழுதப்படவில்லை. கூடுதலான மெய்விசாரங்கள் நிகழ்கின்றன. அவற்றை நோக்கி அவரைக் கொண்டுசென்றவை கட்டுரைகளே. கட்டுரையம்சம் கலந்த கதைகள் வழியாகவே நாஞ்சில்நாடன் எண்பது தொண்ணூறுகளின் நவீனத்துவ யதார்த்தவாதத்தைக் கடந்து அடுத்தகட்ட புனைவுலகுக்கு வந்தார். கட்டுரைகள் வழியாக தன் உள்ளத்தை மொழியில் உரைக்க நாஞ்சில்நாடன் பயின்றார் என நினைக்கிறேன். தன் அகத்தை அவர் கட்டமைத்துக்கொண்டார், அதன்பின் அதைக் கடந்து அருவமும் நுட்பமுமான தளங்களை நோக்கி நகர்ந்தார்.
நாஞ்சில்நாடனின் அந்த ஆழ்ந்த அகப்பயணத்தை அவருடைய தொடக்ககாலக் கட்டுரைகளில் துல்லியமாகக் காணமுடிகிறது. அந்த பயணத்தின் தொடக்கமும் முதிர்வும் நிகழ்ந்த முதற்கட்டக் கட்டுரைகள் இவை.
ஜெயமோகன்
காவலன் காவான் எனின் - Product Reviews
No reviews available

