தொல்காப்பிய உரைகளும் பின்வந்த இலக்கணங்களும்
தொல்காப்பிய உரைகளும் பின்வந்த இலக்கணங்களும்
தொல்காப்பியம் என்பது நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பழமையான இலக்கண நூலாகும். இது தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் மக்களின் அறிவுசார் வளர்ச்சியையும் உலகறியச் செய்த பெருமைக்குரியது. எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு ஒன்பது இயல்கள் என இருபத்தேழு இயல்களைக் கொண்டுள்ளது.
இந்நூலுக்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர். சேனாவரையர். தெய்வச்சிலையார். பேராசிரியர் என உரையாசிரியர்கள் பலர் உரை எழுதியுள்ளனர். இந்த உரைகளின் வழி, சொல் இலக்கணத்தை ஒப்பிட்டு ஆய்ந்து உரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது.
மேலும், இன்று மறைந்துவிட்ட இலக்கண நூல்கள் பற்றியும் வாழ்கின்ற இலக்கண நூல்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது. தொல்காப்பியத்துக்குப்பின் எழுந்த இலக்கண வளர்ச்சியையும், தொல்காப்பியத்துக்கு எழுந்த உரைகளையும் நோக்கி, சொல்லிலக்கணம் செல்வாக்கு பெற்றுள்ளதை இந்நூல் ஆய்ந்துரைக்கிறது.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் தத்தம் உரைகளில் ஒருவரை ஒருவர் மறுத்தும், ஒன்றுபட்டும் உரை எழுதிச் சென்றுள்ளதை நுட்பமாக நோக்கி, அவற்றை விளக்கிச் செல்வதாக இந்த நூல் அமைந்துள்ளது. உரையாசிரியர் உரைகளில், மறைந்த இலக்கண நூல்களின் பெயர்கள் மட்டுமல்லாது, நாட்டுப் பெயர்கள், ஊர்ப் பெயர்கள் முதலான வரலாற்றுச் செய்திகளும் காணப்படுவதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
தொல்காப்பிய உரைகளும் பின்வந்த இலக்கணங்களும் - Product Reviews
No reviews available

