உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு
தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம்.
1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம்.
நடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம்.
நேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!