தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்
தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்
தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஒன்று சேலம் மாவட்டம். சேர மன்னர்களால் ஆளப்பட்ட சேர்வராயன் மலைப்பகுதியை உட்கொண்டதால் சேலம் என அழைக்கப்பட்டாலும், வேறு சில காரணங்களும் உரைக்கப்படுகின்றன. இப்பொழுது முக்கனிகளுள் ஒன்றான மாம்பழத்திற்குப் பேர் பெற்றதாக உள்ளது. சேலம் இரும்பு உருக்காலை தொழிலின் இடமாகவும் விளங்கும் கொங்குநாட்டுப் பகுதி. இங்கு வழிபாட்டுக்குரியதாக இடம்பெற்றிருக்கும் திருக்கோயில்களின் தொகுப்பாக, 43 திருத்தலங்களின் வரலாறுகள் இடம் பெற்றிருக்கும் "தொல்லியல் நோக்கில் சேலம் மாவட்டம் திருக்கோயில்கள்" என்னும் இந்நூல் அமைந்துள்ளது. மாவட்ட வரலாற்றுப் பின்னணியுடன் திருத்தலங்களின் குறிப்பும் அமைந்து தமிழ்நாட்டின் பெருமையை மேலோங்கச் செய்கிறது. 'கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்' என்னும் முன்னோர் மொழிக்கேற்பச் சிறப்பிடம் பெற்றுள்ளது இந்த நூல். சுற்றுலா வாசிகளுக்கும், பக்தர்களுக்கும் சிறந்த வழிகாட்டி நூல்.சிறப்புடைய இந்த நூலை தொல்லியல் ஆய்வாளர் ச.செல்வராஜ் அவர்கள் உருவாக்கியுள்ளார். தமிழ்நாட்டின் தனிப்பெரும் சொத்தாக விளங்கும் கோயில்களை அரிதின் முயன்று வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கியிருப்பது அருமை. தொல்லியல் ஓர் அறிமுகம், செம்பியன் மாதேவி, புதையுண்ட தமிழகம், தாய்த் தெய்வங்கள், தகடூர் நாட்டுக் கோயில்கள், தொல்பொருள் கலைக்களஞ்சியம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கடல் கொண்ட பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு அகழாய்வுகளில் பங்கு பெற்றுள்ளார். இந்து சமயச் சேலம் மாவட்டத் தொல்லியல்துறை ஆலோசகராகச் செயல்பட்டு வருகின்றார்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்னும் ஔவையாரின் வாக்கிற்கேற்ப அமைந்துள்ள இந்த நூலை எமது பதிப்பகத்தின் வழி வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள் - Product Reviews
No reviews available

