திருவரங்கன் திருவிழி
திருவரங்கன் திருவிழி
ஸ்ரீ ரங்கப் பெருமாளின் திருவிழிகளாகப் பதிக்கப்பட்டிருந்த வைரங்களைக் கொள்ளையடிக்க அந்நிய நாட்டினர் செய்த சதிகளை ஒட்டி இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சந்தா சாகிப்பின் ஆதிக்கம் ஓங்கியிருந்த காலகட்டத்தில் நடக்கும் இந்த நாவல் நட்பு, காதல், அந்நிய நாட்டினரின் வஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் தமிழர்களின் வீரம், தியாகம் ஆகியவற்றோடு, தான்கொண்ட கொள்கைக்காகவும், ஸ்ரீ ரங்கநாதர் மேல் கொண்டிருந்த பக்திக்காகவும், நம் நாட்டின் பொக்கிஷத்தை மீட்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகவும் போராடிய ஒரு வீரப் பெண்மணியின் கதையைச் சொல்கிறது.
வரலாற்று நிகழ்வுகளையும் கற்பனையையும் கலந்து இந்த நாவல் நம்மை அந்தக் காலகட்டத்திற்கே கடத்தி, அந்த நிகழ்வுகளின் ஊடே நம்மையும் பயணிக்க வைக்கும் மாயத்தைச் செய்கிறது.
தன் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு புதிய முத்திரையைப் படைக்கும் ஸ்ரீமதி, இந்தப் படைப்பில் தன் எழுத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.
திருவரங்கன் திருவிழி - Product Reviews
No reviews available

