தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் அல்லது சூரியனைப் பற்றிய கதைகள்
Author: ஹோவர்ட் கிங்ஸ்கோட் , நடேச சாஸ்திரிகள்
Category: சிறுகதைகள்
Available - Shipped in 5-6 business days
தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் அல்லது சூரியனைப் பற்றிய கதைகள்
அறமும், அறத்தோடு சேர்ந்த புத்திக்கூர்மையும் தந்திரமும் இந்திய நாட்டுப்புறக் கதைகளின் தனித்தன்மைகளாக இருக்கின்றன. அறிவின்மை கண்டிக்கப்படுகிறது. இதுவே நம் நாட்டின் குணாம்சம்.
பிற நாட்டுக் கதைகளைப் போலவே தென்னிந்தியக் கதைகளும் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவை. மாயாஜாலமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளும் இந்தக் கதைகளில் பெரும்பங்கு வகிக்கின்றன. தெய்வ சக்தியின் மகிமையும் இக்கதைகளில் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.
இந்தக் கதைத் தொகுப்பு பழங்காலக் கதைசொல்லும் மரபின்மீது வெளிச்சம் பாய்ச்சுவதோடு, இந்தியர்களின் இயல்பான தனித்தன்மைகளையும், அத்துடன் பிற நாடுகளின் நாட்டுப்புறக் கதைகளின் நன்னெறிகளையும் ஒருசேர வெளிக்கொணர்கின்றன.
நடேச சாஸ்திரிகளின் வழிகாட்டுதலில் ஹோவர்ட் கிங்ஸ்கோட் தொகுத்த, ‘Tales of the Sun or Folklore of Southern India’ என்ற புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் வானதி.
தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் அல்லது சூரியனைப் பற்றிய கதைகள் - Product Reviews
No reviews available

