சௌராட்டிரரின் வாய்மொழி இலக்கியம்
சௌராட்டிரரின் வாய்மொழி இலக்கியம்
ham நூலாசிரியர் முனைவர் லொ.ஆ. உமாமஹேஸ்வரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். பல்வேறு தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் 80- க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அளித்தவர். சௌராட்டிரர் பண்பாடு குறித்து கள் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை இலக்கிய முத்துக்கள் எனும் நூலாக வெளியிட்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிறுவனம் நூலாக வெளியிட் டுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தைத் தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் புலம் பெயர்ந்த மக்களான சௌராட்டிரரின் வாய்மொழி இலக்கியத்தைக் குறித்த தகவல்களை இந்நூல் தருகிறது. மதுரை, சேலம், தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இம்மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் வாய்மொழி இலக்கியம் குறித்த புரிதல் தமிழாய்வில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் சௌராட்டிரப் பொது மக்களுக்கும் பயனளிக்கும் அரிய நூலாகத் திகழும், சௌராட்டிர வாய்மொழி இலக்கியம் குறித்த கள ஆய்வுகளை முன்னிறுத்திச் செய்யப்பட்ட முதல் ஆய்வு நூலாகவும் இந்நூல் அமைகின்றது.
சௌராட்டிரரின் வாய்மொழி இலக்கியம் - Product Reviews
No reviews available

