சோஃபியா டால்ஸ்டாயின் நாட்குறிப்பு(1860–1891)

0 reviews  

Author: அலெக்சாண்டர் வெர்த் ; தமிழில்: வானதி

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  550.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சோஃபியா டால்ஸ்டாயின் நாட்குறிப்பு(1860–1891)

சோஃபியா ஆண்ட்ரேயெவ்னாவின் நாட்குறிப்புகள் (1860–1891), புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயுடனான அவரது திருமணத்தில் தொடங்கி, அவர்களது இருபத்தேழு ஆண்டுகால திருமண வாழ்க்கையை மிக நுணுக்கமான அவதானிப்புகளுடன் பதிவு செய்கின்றன.
சோஃபியாவின் வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை. அவர் ஆழமாக நேசித்த கணவரே அவருக்கு எண்ணற்ற சிரமங்களை ஏற்படுத்துகிறார். அவருடைய குழந்தைகளும் பல்வேறு விதங்களில் அவரைச் சோதித்தனர். டால்ஸ்டாயின் வாழ்க்கைக்கும், அவரது திருமணத்திற்கும் சாட்சியமாக இந்த நாட்குறிப்புகள் விளங்குகின்றன. அதே நேரத்தில், கணவனின் அன்புக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் உள்ளக்குரலாகவும் இக்குறிப்புகள் ஒலிக்கின்றன.
ஒரு பெண்ணாகத் தனது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து, மனைவியாகவும் தாயாகவும் மட்டுமே வாழும் வாழ்க்கையை சோஃபியா ஏற்றுக்கொள்கிறார். அந்தப் பாத்திரத்திற்குள் இருக்கும் தனிமை, ஏக்கம், கோபம், அன்பு, ஏமாற்றம் அனைத்தும் இந்தப் பக்கங்களில் வெளிப்படுகின்றன.
இந்த நாட்குறிப்புகளின் பக்கங்களில், முதலில் ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் குரலைக் கேட்கிறோம். பின்னர் தனது கணவன், குழந்தைகள், வீடு, சொத்துகள், பணம், வெளியுலகத் தொடர்புகள் எனக் குடும்பத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் தன் தோள்களில் சுமக்கும் ஒரு பெண்ணின் குரலாக அது வளர்கிறது.
இந்தக் குரல் சோஃபியாவுடையது மட்டுமல்ல. அது நம்முடைய அம்மாக்களின், மனைவியின், மகள்களின் குரலாகவும் நமக்குள் ஒலிக்கிறது.

சோஃபியா டால்ஸ்டாயின் நாட்குறிப்பு(1860–1891) - Product Reviews


No reviews available