சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price.:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

 உலகம் முழுக்க சிவ வழிபாடு வியாபித்து இருப்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சிவனின் பெயரால் தீவுகள், இடங்கள், லிங்கங்கள், சிலை வடிவங்கள் என அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, சீனா, இலங்கை, லண்டன் போன்ற நாடுகளிலும் பரவி இருந்திருக்கின்றன. நாம் எளிதில் காணக்கிடைக்காத அரிய சிவ வடிவங்கள் சிற்பங்கள், ஓவியங்கள், செப்புச் சிலைகள், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும் இருப்பதை இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது. பொதுவாக சிவன் கோயில்களுக்குச் செல்லும் பலரும் வழிபாடு செய்துவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால். அங்கே அமைந்திருக்கும் பைரவர், சரபர், கங்காளர், சுகாசனர் போன்ற உருவங்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பார்கள். அவை வெவ்வேறு கதைகளை உருக்கொண்ட சிவனின் வடிவங்கள்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக, சிவ வடிவங்கள் மொத்தம் எத்தனை இருக்கின்றன? ஒவ்வொன்றுக்கும் உள்ள பயன், அமைப்பு, அமைந்துள்ள இடங்கள், எந்த காலத்தைச் சார்ந்தது? அவற்றை எப்படி வணங்க வேண்டும்? போன்ற விவரங்களை அவற்றின் புகைப்படங்களுடன் அழகான, தெளிவான நடையில் விளக்கியுள்ளார் ஆன்மிக எழுத்தாளர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். தேவாரப் பாடல்கள் போன்று, அத்தனை சிவ தலங்களுக்கும் நம்மை அழைத்துச் சென்று சிவ வடிவங்களை வழிபட வைக்கிறது இந்த நூல். ‘சக்தி விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ‘சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்’ இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்!

Product Reviews


No reviews available