சீனாவின் வரலாறு.

சீனாவின் வரலாறு.
வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியது. ஒருநாடு புராதனப் பெருமையுடையதாய் இருக்கலாம் .நீண்ட கால சரித்திரத்தையும் வேண்டிய அளவுக்கு நாகரிக பண்புகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் அது தன் பழைய பெருமையிலே எப்போதும் நிலைத்துக் கொண்டும் தன்னுடைய நாகரிகப் பண்புகளைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கக்கூடாது .இருந்தால் தேக்க நிலை ஏற்படும். அப்போது தூக்கம் தான் வரும்.அந்த தூக்க நிலையில் அதனை எந்த ஓர் அந்நிய சக்தியும் வந்து தன் ஆதிக்கத்திற்குள் பணிந்து விடும் .பிணிபட்ட பிறகு விடுவித்துக் கொள்வது கஷ்டம்.அசாதாரணமான முயற்சிகள் தேவைப்டும் .இவைகளில் நின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பும் எந்த ஒரு சாடும் தன்னுடைய பழைய சரித்திரத்தில் இருந்தும் புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு வர வேண்டும்.காலத்திற்கு ஏற்றவாறு தனது நாகரிக பண்புகளை புதுப்பித்துக் கொண்டும் ஒழுங்குபடுத்துக் கொண்டும் வரவேண்டும்.இவற்றிற்கு மேலாக உலகத்தோடு ஒட்டி வாழ தெரிந்த கொள்ள வேண்டும்.தெரிந்து கொள்ளாவிட்டால் அடிமைப்படவோ அழிந்துபடவோ வேண்டியதுதான்.
சீனாவின் வரலாறு. - Product Reviews
No reviews available