FD tipu-sultan-90567.jpg

திப்பு சுல்தான் (Kizhakku)

0 reviews  

Author: மருதன்

Category: வரலாறு

Stock Available - Shipped in 1-2 business days

Price:  170.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திப்பு சுல்தான் (Kizhakku)

சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான். கொடூரமானவர்;எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர்; இந்து மத விரோதி; கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியவர்.இப்படி அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது. உண்மை என்ன? இந்திய சுதந்தரப் போராட்டத்தின் வீர சகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது.வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு, எதிர்த்த முதல் இந்தியர் அவர். மீண்டும் மீண்டும் திப்புவைச் சீண்டி, மீண்டும் மீண்டும் தோற்றுப்போனார்கள் ஆங்கிலேயர்கள். துரோகம், சதி, சூழ்ச்சி எதுவும் பலிக்கவில்லை. வேறு யாரைக் கண்டும் அல்ல. திப்புவைக் கண்டு மட்டுமே அஞ்சுகிறேன் என்று கிழக்கிந்திய கம்பெனிக்கு அவசரம் அவசரமாகக் கடிதம் எழுதினார் அந்நாளைய ஆங்கிலேய கவர்னர். தன் வாழ்நாள் முழுவதும் திப்பு சுல்தான் தேடியது அமைதியை மட்டுமே. அமைதியைத் தேடிச் சென்றவருக்குப் போர்க்களங்கள் மட்டுமே எதிர்ப்பட்டது ஒரு வினோதம்தான்.வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த ஒரு மகத்தான போராளியின் மிரட்டும் வாழ்க்கை.