போரிட்டு உண்
போரிட்டு உண்
காதலைப் போல உணவும் ஓர் உணர்வே. ஓர் இனிப்பைச் சுவைக்கும் அனுபவத்தைக் கண்களை மூடிச் சிந்தியுங்கள். முதல் பார்வையால் ஈர்க்கப்பட்டு அதன் உருவத்தை ரசிப்பீர்கள். உங்கள் காதலைச் சொல்லும் மென்மையோடு அதை ருசிப்பீர்கள். இணைந்த காதல் தரும் மனநிறைவை பசியாறிய பின் உணர்வீர்கள். அந்த ருசிகர உணர்வைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம்.
எதிர்ப்பு இல்லாத காதல் ருசிக்குமா? காலத்துக்கேற்ப உருமாறிய உணவுகள் கலைஞர்களை மட்டுமல்ல போர்களையும் உருவாக்கியுள்ளன. அதிகாரம், பழி, நிலம், இனம், சித்தாந்தம் போலவே உணவும் போருக்கான முக்கியக் காரணிகளுள் ஒன்று. உணவின் மீதான பேராசையோ பற்றாக்குறையோ போரில் முடிந்திருப்பதை விவரிக்கிறது இந்த புத்தகம்.
உணவின் வகைகளைப் போலவே அதற்கான போர்களிலும் பலவகை உண்டு. எதிரி மீது பட்டுவிடாமல் குண்டுகளை வீசிவிட்டு ரகசியமாக இருதரப்பும் சேர்ந்து உண்டு களித்திருக்கிறார்கள். இதற்கெல்லாமா போரிடுவது என்று போர்க்களத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளார்கள். தோலுரிக்கப்பட்டு உயிர் விட்டவர்களும் உண்டு. ஆயுதங்களின்றி சமையல் சாதனைகளை நிகழ்த்திப் போரிட்டவர்களும் உண்டு.
உணவுக்காக போரிட்ட ருசிகர வரலாற்றைச் சுவைத்து அனுபவிக்க உதவும் புத்தகம்.
போரிட்டு உண் - Product Reviews
No reviews available

